விக்ரமாதித்யனின் 15ஆவது கவிதைத் தொகுப்பு சேகர் சைக்கிள் ஷாப் 2007ல் வெளியாயிற்று. சுய எள்ளலும் சூழல் பற்றிய பகடியும் கூர்மையான விமர்சனமும் கொண்ட கவிதைகள் வாசிக்கக் கிடைக்கின்ற தொகுதி இது. உலகியல் / மனிதர்கள்அன்பாகவேவரவேற்கிறார்கள்அன்பாகவேபேசுகிறார்கள்அன்பாகவே நடத்துகிறார்கள்அன்பாகவே இருக்கிறார்கள்அன்பாகவேவழியனுப்புகிறார்கள்அன்புக்குபஞ்சமில்லைஎனில்பண உதவி மட்டும் கேட்டுவிடலாகாது அமர்என்ன விஷயமென்றால்அன்பு வேறு பணம் வேறுஎளிதில்கிடைக்குமாயிருக்கும் அன்புஆனால்எப்பாடு பட்டாவது சம்பாதிக்க வேண்டியிருக்கிறது பணம்.Oடாஸ்மாக்கைக் கடந்து செல்லும் கவிஞன்"டாஸ்மாக்கைகடந்துவிடப் பார்க்கிறான் கவிஞன்கடந்து கடந்துதீரவில்லை தொலையவில்லை டாஸ்மாக்குகள்""கையில் பணம் வைத்திருப்பதைகவனித்துவிடுகிறது டாஸ்மாக்சன்மானம் வருவதைசரியாகத் தெரிந்துகொள்கிறது டாஸ்மாக்நண்பர்களை நேரம் காலம் பார்த்து அனுப்பிவைக்கிறது டாஸ்மாக்கவிதை வருமென்று வேறு ஆசைகாட்டுகிறது டாஸ்மாக்" Oகருத்தரங்குஉள்ளும்வெளியும்”சாலிவாகனன் கவிதைகள்தாம் தமிழில்போலி விரக்தியை விதைத்தவை எனவேசாலிவாகனனை நிராகரிக்கவே செய்கிறேன் நான்”சிரித்தபடியே சொல்லிக் கொண்டிருந்தார் கவிஞர் மூர்த்தி”முஸ்தாபாவின் நாவல்கள்சருமத்தைத் தாண்டிசாரத்தைத் தொடவேண்டும்”சன்னமான குரலில் கட்டுரை வாசித்தார் ராமசாமி”குட்டி இளவரசன் சிறுகதைகள்சுயஜாதி அபிமான வெளிப்பாடு கொண்டவை”கட்டுடைத்துக் கண்டுபிடித்துகண்ணியமாய்க் கண்டனம் செய்தார் முத்து”தயிர்வடை சென்ஸிபிலிட்டிஒன்றுக்கடிப்பேன் சித்தன் எழுத்தில்போர்னோகிராபி இலக்கியம்தான்”பேசியே மிரட்டி வைத்தார் கலகக் கண்மணி”இதுவரை எழுதப்பட்டவையெல்லாம்இந்துத்வா மற்றும் ஜாதி இந்துக்கள் எழுத்துதாம்இதை இப்படியே அனுமதிக்க முடியாது”இனிமையாகவே எடுத்துப் பேசினார் கிறிஸ்டோபர்குடிக்கக் கிடைத்த சந்தோஷத்தில்குறுக்கிட்டுக் குறுக்கிட்டுகேட்டுக் கொண்டிருந்தான் விக்கி”பாரதி பாரதிதாசன் கண்ணதாசன் இடம் என்ன?கருத்தரங்குக்கு வந்திருந்தவர்கள்கலவரப்பட்டுப் போய்விடலாமா என யோசித்துமிச்ச வேடிக்கைகளையும் பார்த்துவிடலாமெனமுடிவுசெய்து இருந்து விட்டார்கள்Oவழமைபோல செண்பகாடவியில் அருவிவிழுந்து கொண்டிருந்தது.குற்றாலநாதr கோயிலில் ஆறுகால பூஜைகுறைவில்லாமல் நிகழ்ந்து கொண்டிருந்ததுபிராந்திக் கடைகளில் எப்பொழுதும்போல வியாபாரம் நடந்துகொண்டிருந்ததுதென்காசி தென்காசி என்று கூவியழைத்துவேன்காரர்கள் ஆள்களை ஏற்றிப் போய்க்கொண்டேயிருந்தார்கள்குரங்குகள்தாம் பாவம் இரையில்லாமல் யார் என்னகொண்டுவருவார்களென்று பார்த்துக்கொண்டேயிருந்தன
Post a Comment for "[Download] சேகர் சைக்கிள் ஷாப்: Sekar Cycle Shop (Tamil Edition) by Vikramadithyan ~ Book PDF Kindle ePub Free"